Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்காக 20 மில்லியன் வெள்ளிவரை வசூலித்த மூத்த முகவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்

சிங்கப்பூரில் சட்டவிரோதச் சூதாட்டச் செயல்கள் கவலைக்குரிய அம்சமாய் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -
சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளுக்காக 20 மில்லியன் வெள்ளிவரை வசூலித்த மூத்த முகவர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்

(படம்: Nisha Karyn)


சிங்கப்பூரில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மூலமாக 20 மில்லியன் வெள்ளிவரை வசூலித்தது குறித்த குற்றச்சாட்டுகளை 68 வயதான மூத்த முகவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

2001ஆம் ஆண்டிலிருந்து நான்கிலக்கச் சீட்டுகளைச் (4D) சட்டவிரோதமாக விற்பனைசெய்த ஆ டீ (Ah Tee) என்ற நபரிடமிருந்து லிம் டெங் கொக் (Lim Teng Kok) வாங்கத் தொடங்கினார்.

2005ஆம் ஆண்டு ஆ டீயிடம் வேலைக்கும் சேர்ந்தார் லிம்.

தமது மகளின் மருத்துவச் செலவுகளுக்குக் கூடுதல் பணம் தேவைப்பட்டதால், அப்படிப்பட்ட வேலையைச் செய்ய லிம் முன்வந்ததாக அவரது வழக்குரைஞர் சொன்னார்.

2007ஆம் ஆண்டு ஆ டீ தமது முதலாளி என்று அறிமுகப்படுத்திய லின் கே சியோங்கிடம் லிம்மை வேலைக்குச் சேர்த்துவிட்டார்.

சூதாட்ட நடவடிக்கைகளுக்காகத் தாம் சேர்க்கும் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றால், லிம்முக்குக் கூடுதல் பணம் கிடைத்தது.

2012ஆம் ஆண்டில் லிம், தனக்குக் கீழ் பணிபுரிய ஆட்களைச் சேர்க்கத் தொடங்கினார்.

நான்கு ஆண்டுகளில் அவருக்குக் கீழ் 90க்கும் அதிகமானோர் பணிபுரிந்தனர்.

9 ஆண்டுகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாக லிம் 9.7 மில்லியன் முதல் 20 மில்லியன் வெள்ளிவரை வசூலித்ததாகக் கூறப்பட்டது.

சிங்கப்பூரில் இதுவரை வெளிச்சத்துக்குவந்த ஆகப் பெரிய சட்டவிரோத சூதாட்டக் கும்பலில் லிம் முக்கியப் பங்குவகித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டு லிம் உள்பட 48 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

சிங்கப்பூரில் சட்டவிரோதச் சூதாட்டச் செயல்கள் கவலைக்குரிய அம்சமாய் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அடுத்தமாதம் லிம்முக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவிக்கும்.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்