Images
  • Gan Kim Yong (1)
    (படம்: CNA) 

CareShield Life திட்டத்தின் முக்கிய நோக்கங்களைப் பற்றி விவரித்த சுகாதார அமைச்சர்

சிங்கப்பூர்: உடற்குறையுள்ளோருக்கான புதிய, தேசியக் காப்புறுதித் திட்டமான CareShield Life திட்டத்திற்கான அடிப்படைக் கூறுகள் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் (Gan Kim Yong) தமது உரையில் அந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் பற்றி விவரித்திருந்தார்.

CareShield Life திட்டமானது, ஒருங்கிணைப்புத் தன்மை, செலவு ஏற்புடைத்தன்மை, தாக்குப்பிடிக்கும் தன்மை முதலிய மூன்று அம்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்படுவதாக அவர் சொன்னார். மேலும், அத்திட்டம் சிங்கப்பூரின் சமூகப் பாதுகாப்பு வலையை மேலும் வலுப்படுத்த துணை நிற்கும் என்றார் அவர்.

2020ஆம் ஆண்டு நடப்புக்கு வரவிருக்கும் அந்தத் திட்டம், உடற்குறையுள்ளவர்களுக்கான ஒருமித்த திட்டமாகத் திகழும் என்று அமைச்சர் கான் விளக்கினார்.

மேலும், அந்தத் திட்டத்தில் சேரும் நபர்கள் சந்தாத் தொகை செலுத்த முடியாமல் போகும் எனில், அவர்களுடைய இழப்பீட்டுத் தொகையில் எந்தவித பின்னடைவும் ஏற்படாது என்று அவர் உத்தரவாதம் அளித்தார்.

அரசாங்கம் குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் சிங்கப்பூரர்களுக்கு, வசதிக்கு ஏற்ப சோதனை செய்யும் திட்டத்தின் கீழ், சந்தா சலுகைகளை அளிக்கும் என்றும் அது CareShield Life திட்டத்தின் நிரந்தர அம்சமாக இருக்கும் என்றும் அவர் சொன்னார். சந்தா சலுகைகள் கிடைக்கப்பெற்ற நிலையிலும் கூட, சந்தா செலுத்த முடியாமல் போகும் சிங்கப்பூரர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க ஆவண செய்யப்படும் என்றார் அவர்.



    

உங்கள் கருத்து

Top