Images
  • MOH Gan
    (படம்: CNA)

சுகாதார எச்சரிக்கை விழிப்புநிலையை சிவப்புக்கு உயர்த்தும் திட்டம் இல்லை- சுகாதார அமைச்சர் கான்

சிங்கப்பூரில் சுகாதார எச்சரிக்கை விழிப்புநிலையை சிவப்புக்கு உயர்த்தும் திட்டம் இல்லை என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

விழிப்புநிலை சிவப்புக்கு உயர்த்தப்படும் என்று பரவிவரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.

கிருமியைக் கட்டுப்படுத்த தற்போது சிங்கப்பூர் போராடிவரும் நேரத்தில் வதந்திகளைப் பரப்புவோரைத் தடுக்க நேரத்தைச் செலவிடுவதில் அர்த்தம் இல்லை என்றும் திரு கான் கூறினார்.

கிருமித்தொற்று உள்ளவர்களை ஒவ்வொருவராக அடையாளம் காண்பது எளிதான செயல் அல்ல என்பதால், கிருமித்தொற்று இருப்பதாகச் சந்தேகம் உள்ளவர்கள் தாமாக முன்வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் தற்போது சுகாதார எச்சரிக்கை விழிப்புநிலை அரஞ்சு நிறத்தில் உள்ளது.


 

Top