Images
  • Bayfro
    படம்: Alif Amsyar

கரையோரப் பூங்கா பற்றிய சில சுவைத் தகவல்கள்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

கரையோரப் பூங்காவின் புது அம்சமான, Bayfront Plaza-வின் திறப்பு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கரையோரப் பூங்காவில் பொழுதைக் கழிக்க பல அம்சங்கள் உள்ளன. தற்போது அது உலக அளவில் பிரபலமடைந்துள்ளது.

கரையோரப் பூங்கா பற்றிய சில சுவைத் தகவல்கள் இதோ...

* கரையோரப் பூங்கா 2012ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

* இதுவரை 50 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் கரையோரப் பூங்காவிற்கு வருகைதந்துள்ளனர்.

* கடந்த ஆண்டு, பூங்காவிற்கு வந்த 50 மில்லியனாவது வருகையாளருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

* பூங்காவில் உள்ள SuperTrees உலக அளவில் பிரபலம்

* வெளிநாட்டவர் சிங்கப்பூரை அடையாளம் காணும் சின்னங்களில் ஒன்றாக SuperTrees உருவெடுத்துள்ளன.

* வேலைக்குப் பின் உடற்பயிற்சி செய்யவும், ஓய்வாகப் பொழுதைக் கழிக்கவும் பூங்கா ஏதுவாக உள்ளது.

* அதிக மதிப்புமிக்க நகர்ப்பகுதியில், பூங்காவுக்கென இவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கிப் பெருந்தொகையை அரசாங்கம் முதலீடு செய்தது வீண்போகவில்லை.

* பூங்காவில் காலத்திற்கு ஏற்பப் புதுப் புதுக் கருப்பொருள்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

* வசதி குறைந்த சிங்கப்பூரர்களும் கரையோரப் பூங்காவைக் கண்டுகளிக்க, சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன.


Top