Images
  • gardens by the bay murder (1)
    (படம்: Facebook/Leslie Khoo, Yajie Cui)

கரையோரப் பூந்தோட்டக் கொலை: பெண்ணின் சடலத்தை மீட்க சுங்கை பூலோ சதுப்புநில நீரை வடித்த காவல்துறை

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

கரையோரப் பூந்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டப் பெண்ணின் எஞ்சிய உடற்பாகங்களைத் தேடுவதற்காகக் காவல்துறை அதிகாரிகள் சுங்கை பூலோ சதுப்புநிலத்தின் ஒரு பகுதியில் தண்ணீரை வடிக்க வேண்டியிருந்தது.

அந்த வழக்கின் நான்காம் நாளான இன்று (மார்ச் 15) காவல்துறை அதனைத் தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட 31 வயது சுய் யாஜியின் (Cui Yajie) சடலம் லிம் சூ காங்கிலுள்ள சிறிய சாக்கடையில் வைக்கப்பட்டது.

அந்தச் சாக்கடை சதுப்புநிலப் பாதுகாப்புப் பகுதியில் போய்ச் சேரும்.

சதுப்புநிலப் பாதுகாப்பு பகுதியிலிருந்து பல்வேறு பொருள்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்ணைக் கொன்றதாக நம்பப்படும் 50 வயது லெஸ்லி கூ குவீ ஹொக் (Leslie Khoo Kwee Hock) தாமாகவே காவல்துறை அதிகாரிகளை லிம் சு காங் லேன் 8இற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால் அங்கு சுய்யின் சடலம் இருக்காது என்று அவர் கூறியிருக்கிறார்.

சுய்யின் சடலத்திற்குத் தீமூட்டியதாகவும் அவர் சொன்னார்.

அடுத்த செவ்வாய்க்கிழமை தற்காப்புத் தரப்பு அதன் வாதத்தைத் தொடங்கும்.

அப்போது கூ சாட்சியமளிப்பார்.  

Top