Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காஸாவுக்கும் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளுக்குமான அனைத்து பயணங்களையும் தவிர்க்கவும்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

காஸாவுக்கும் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளுக்குமான அனைத்து பயணங்களையும் தவிர்த்துகொள்ளுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
காஸாவுக்கும் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளுக்குமான அனைத்து பயணங்களையும் தவிர்க்கவும்: சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு

(படம்: AFP/MAHMUD HAMS)

காஸாவுக்கும் இஸ்ரேலின் எல்லைப் பகுதிகளுக்குமான அனைத்து பயணங்களையும் தவிர்த்துகொள்ளுமாறு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Bethlehem, Jericho, Ramallah ஆகிய பகுதிகள் உட்பட, மேற்கு கரைக்கான, முக்கியத் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அந்தப் பகுதியில் வெடித்துள்ள வன்முறை சம்பவங்களால் அது குறித்து அமைச்சு அக்கறை தெரிவித்தது.

இஸ்ரேலிய துருப்புகளுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே வன்முறை மூண்டுள்ளது.

இஸ்ரேலுக்கான அதன் தூதரகத்தை நேற்று முன்தினம் அமெரிக்கா ஜெரூசலத்தில் திறந்ததை ஒட்டியும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
வன்முறை சம்பவங்களில் குறைந்தது 58 பேர் மாண்டனர்.

சுமார் ஈராயிரத்து 700 பேர் காயமடைந்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்