Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் அதிகமானோர் கரையோரப் பூந்தோட்டத்திற்குச் செல்ல உதவி

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் அதிகமானோர் இனி கரையோரப் பூந்தோட்டத்திற்குச் சென்று காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

வாசிப்புநேரம் -
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் அதிகமானோர் கரையோரப் பூந்தோட்டத்திற்குச் செல்ல உதவி

கரையோரப் பூங்கா(படம்- youtube)

குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் அதிகமானோர் இனி கரையோரப் பூந்தோட்டத்திற்குச் சென்று காட்சிகளைக் கண்டு ரசிக்கலாம்.

'Gift of Gardens' என்னும் சமூக மேம்பாட்டுத் திட்டம் அதைச் சாத்தியமாக்கும்.

Bloomberg நிறுவனத்தோடு இணைந்து, திருமதி லூசி இயோ (Lucy Yeo) எனும் தனிநபர் திட்டத்திற்கு 250,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார்.

திட்டத்தின் புரவலர் அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob), நன்கொடைக் காசோலையைப் பெற்றுக்கொண்டார்.

Tote வாரியம், அந்த நன்கொடைக்கு ஈடான தொகையை வெள்ளிக்கு வெள்ளி எனும் அடிப்படையில் வழங்கும்.

அது, நிதிப் பிரச்சினை உள்ளோரும் உடற்குறை உள்ளோரும் கரையோரப் பூந்தோட்டத்திற்கு இலவசமாகச் செல்ல வகைசெய்யும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்