Images
  • GDP Estimates
    (படம்: AFP/Roslan Rahman) 

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மெதுவடைந்துள்ளது

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மெதுவடைந்திருப்பதாக வர்த்தகத் தொழில் அமைச்சின் உத்திப்பூர்வ மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் 3.8 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக தெரிவிக்கப்பட்டது.

துறை சார்ந்த அடிப்படையில், உற்பத்தித் துறை, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 8.6 விழுக்காடு வளர்ச்சி கண்டது. முன்னைய காலாண்டில், அந்தத் துரை 9.7 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.

கட்டுமானத் துறை தொடர்ந்து சரிந்து வருவதாக அறிக்கைகள் கூறின. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில், அது 4.4 விழுக்காடு சரிந்தது.

சேவைத் துறை, இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 3.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது. அது முன்னைய காலாண்டின் 4 விழுக்காடு வளர்ச்சியைக் காட்டிலும், 0.6 விழுக்காடு குறைவு.
   

உங்கள் கருத்து

Top