Images
  • GDP
    (படம்: Reuters/Woo Yiming) 

சிங்கப்பூர் பொருளியல் இரண்டாம் காலாண்டில் 3.9% வளர்ச்சி


சிங்கப்பூரின் பொருளியல் இரண்டாம் காலாண்டில் 3.9 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாக, வர்த்தக, தொழில் அமைச்சு இன்று (ஆகஸ்ட்13) தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் முன்னுரைக்கப்பட்ட 3.8 விழுக்காட்டை விட அது சற்று கூடுதல்.

இருப்பினும், சில ஆய்வாளர்கள் எதிர்பார்த்த 4.1 விழுக்காட்டு பொருளியல் வளர்ச்சியைவிட அது குறைவு.

சிங்கப்பூர் பொருளியல் இவ்வருடத்தின் முதல் காலாண்டில் 4.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

உள்ளூர், உலகப் பொருளியல் நிலவரம் மற்றும் இவ்வாண்டின் முற்பாதியில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு முழுமைக்குமான சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.5 விழுக்காடிலிருந்து 3.5 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அமைச்சு முன்னுரைத்துள்ளது.

 

Top