Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.2% சுருக்கம்

சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டுக்கான முதல் காலாண்டில் 2. 2 விழுக்காடு சுருங்கியது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 2.2% சுருக்கம்

(படம்: AFP/Roslan RAHMAN)


சிங்கப்பூரின் பொருளியல் இவ்வாண்டுக்கான முதல் காலாண்டில் 2.2 விழுக்காடு சுருங்கியது.

காலாண்டு அடிப்படையில் செய்த திருத்தத்தின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தி 10.6 விழுக்காடு சரிவு கண்டது.

கடந்த காலாண்டுடன் ஒப்புநோக்க, அது கணிசமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த காலாண்டில் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0 புள்ளி 6ஆக பதிவானது.

குறிப்பாக, கட்டுமானத் துறை 22.9 விழுக்காடு குறைந்தது.

கடந்த காலாண்டு அது 5.3 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது.

இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 விழுக்காடு குறையும் என இதற்கு முன் முன்னுரைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அது 4 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

COVID-19 கிருமிப் பரவலால் சிங்கப்பூரின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் லீ சியென் லூங் கூறினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிறுவனங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்