Images
  • Singhealth Parliament
    (படம்: Jeremy Long/ CNA)

பொதுத்தேர்தல்: 93 இடங்களிலும் போட்டி

சிங்கப்பூரின் 13ஆவது பொதுத்தேர்தலில் 93 இடங்களிலும் போட்டி இடம்பெறவிருக்கிறது.

மொத்தம் 192 பேர் போட்டியிடுகின்றனர்.

இன்று முற்பகல் 11 மணியிலிருந்து நண்பகல் வரை வேட்பாளர்கள், 9 நிலையங்களில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

மக்கள் செயல் கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியிடுகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை 10 எதிர்க்கட்சிகள் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

வாக்களிப்பு, ஜூலை 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
 

Top