Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொதுத்தேர்தல் 2020 தொடர்பான விரிவான தகவல்களை நான்கு அதிகாரத்துவ மொழிகளில் Mediacorp வழங்கும்

பொதுத்தேர்தல் 2020 தொடர்பான விரிவான தகவல்களை, மீடியாகார்ப் சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வழங்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

பொதுத்தேர்தல் 2020 தொடர்பான விரிவான தகவல்களை, மீடியாகார்ப் சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வழங்கவிருக்கிறது.

மீடியாகார்ப் நிறுவனத் தொலைக்காட்சி ஒளிவழிகள், வானொலி நிலையங்கள், இணையத்தளங்கள் ஆகியவற்றுடன், meWATCH, meLISTEN, சமூக ஊடக ஒளிவழிகளிலும் தேர்தல் தொடர்பான தகவல்கள் இடம்பெறும்.

வேட்புமனுத் தாக்கல் தினமான நாளை, CNA-யிலும் ஒளிவழி எட்டிலும் இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

meWATCH, cna.asia , 8world ஆகியவற்றிலும் அதே நேரத்தில் அவற்றைக் காணலாம்.

நிகழ்ச்சிகளின் ஒலி வடிவத்தை, meLISTEN, CNA938, CAPITAL 958 ஆகியவற்றில் கேட்கலாம்.

9 வேட்புமனுத் தாக்கல் நிலையங்களிலிருந்தும் நன்றியுரைகள் ஒளிபரப்பாகும்.

வேட்புமனுத் தாக்கல் தினத்திலிருந்து, தேர்தல் குறித்த விரிவான தகவல்களை வழங்கும் பொருட்டு ஒளிவழி 5, ஒளிவழி 8 முதலியவற்றில் செய்தித் தொகுப்பு கூடுதல் நேரத்துக்கு இடம்பெறும்.

அடுத்த மாதம் 2, 9-ஆகிய தேதிகளில் கட்சி அரசியல் ஒளிபரப்புகளைக் காணலாம்.

இம்முறை தொகுதி அரசியல் ஒளிபரப்புகளும் இடம்பெறும். அவை அடுத்த மாதம் 3ஆம் தேதியிலிருந்து ஒளிவழி 5இல் இரவு 7 மணிக்குத் தொடங்கும் அந்நிகழ்ச்சிகள் meWATCH உள்ளிட்டவற்றிலும் நேரடியாக இடம்பெறும்.

வாக்களிப்பு தினத்தன்று 4 அதிகாரத்துவ மொழிகளிலும் தேர்தல் விவரங்களை மீடியாகார்ப் ஒளி-ஒலிபரப்புகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்