Images
  • Bus acc
    ( படம்: Bernam )

கெந்திங் ஹைலண்ட்ஸ் சென்றுகொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதில் சிங்கப்பூரர் மரணம்

மலேசியாவின் கெந்திங் ஹைலண்ட்ஸ் (Genting Highlands) நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சிங்கப்பூரர் ஒருவர் மாண்டார்.

27 வயது பெண்-ஆன செரினா இட்ரிஸ் (Serina Idris) சம்பவ இடத்திலேயே மாண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விபத்து நேர்ந்தபோது ஈரடுக்குப் பேருந்தின் மேல் மாடியிலிருந்து அவர் தூக்கியெறியப்பட்டார்.

இன்று காலை 11.50 மணியளவில் அந்தப் பேருந்து ஒரு லாரியின் பின்புறத்தில் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து ஓட்டுநர் உட்பட மொத்தம் ஐவர் காயமுற்றனர்.

லாரி ஓட்டுநரும், மற்ற 15 பேருந்து பயணிகளும் காயமின்றித் தப்பினர்.

Top