Images
  • Getai video
    படம்: Screengrab/ Facebook

Getai நிகழ்ச்சியில் குண்டர் கும்பல் தொடர்பான வாசகங்களை முழங்கிய ஆடவர் மீது குற்றச்சாட்டு

Getai என்னும் இரவு நிகழ்ச்சியில் குண்டர் கும்பல் தொடர்பான வாசகங்களை முழங்கிய 39 வயது ஆடவர் மீது நாளை (ஏப்ரல் 16) குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி யீஷூனில் அந்த நிகழ்ச்சி நடந்தது.

பேய்த் திருவிழாவின் ஓர் அங்கமாக அரங்கேறிய நிகழ்ச்சியில்
மேடையில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த நபர் ஒலிப்பெருக்கியில் 'Ang Soon Tong' என்னும் குண்டர் கும்பலின் பெயரைக் கத்தினார்.

சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்தது. அது குறித்து செப்டம்பர் 10ஆம் தேதி காவல்துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது.

அவர் அந்த நிகழ்ச்சியின் பாடகர் எனப் பின்னர் தெரியவந்தது.

அச்சுறுத்தும் வார்த்தைகளால் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரின்மீது 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.  

Top