Images
  • Fire (2)
    படம் : Facebook/SCDF

கேலாங்கில் தீ: முழுமையாக எரிந்துபோன 5 கடைவீடுகள்

சிங்கப்பூரின், கேலாங் ரோடு வட்டாரத்தில், இன்று காலை தீ மூண்டது. அதனை அணைக்கும் பணியில் பல தீயணைப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரண்டு மாடிக் கடைவீடுகள் பலவற்றில் பற்றிக்கொண்ட தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.

தீயில் பற்றிக்கொண்ட ஏழு கடைவீடுகளில், ஐந்து முழுமையாக எரிந்துவிட்டன என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப்படை கூறியது.

தீச்சம்பவ்த்தின் இடையே வெடிப்பு சத்தம் ஒன்று கேட்கப்பட்டதாகவும் Channel News Asia செய்தி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட காணொளியின் வாயிலாகத் தெரிய வந்தது.


அந்தத் தீயை அணைப்பதற்கு, சுமார் 3 மணி நேரம் பிடித்ததாக, அதிகாரிகள் கூறினர்.

Top