Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோன்புப் பெருநாள் சந்தை இவ்வாண்டும் இணையம்-வழி மட்டும் நடைபெறும்

நோன்புப் பெருநாள் சந்தை இவ்வாண்டும் இணையம்-வழி நடைபெறும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
நோன்புப் பெருநாள் சந்தை இவ்வாண்டும் இணையம்-வழி மட்டும் நடைபெறும்

(படம்: AFP/Roslan Rahman)

நோன்புப் பெருநாள் சந்தை இவ்வாண்டும் இணையம்-வழி நடைபெறும் என்று மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.

மாறிவரும் COVID-19 சூழலுக்கு ஏற்ப, அதிகக் கூட்டத்தை ஈர்க்கும் சந்தைகள் போடப்படமாட்டா என்று அது கூறியது.

மக்களின் பாதுகாப்பைக் கருதி, சந்தை புதிய மின்னிலக்கத் தளத்தில் நடைபெறும்.

ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து மே 13 ஆம் தேதி வரை இணையச் சந்தை நடைபெறும். நோன்புப் பெருநாளுக்கான ஒளியூட்டும் அப்போது இடம்பெறும்.

இணையச் சந்தைச் சூழலின் மூலம் குடியிருப்பாளர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், இணையத்தளத்தின்வழி தங்கள் வியாபாரத்தை வளர்த்து விரிவுபடுத்தவும் புதிய வாய்ப்புகள் அமையும் என்று கூறப்பட்டது.

நோய்ப்பரவலின் காரணமாகக் கடந்த ஆண்டும் நோன்புப் பெருநாள் சந்தை இணையம் வழி நடத்தப்பட்டது.

விஸ்மா கேலாங் செராய், சிங்கப்பூ மலாய் வர்த்தக, தொழில் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இணையச் சந்தை இடம்பெறும்.

இணையச் சந்தையை ஒட்டி குடியிருப்பாளர்களுக்குப் பல நடவடிக்கைகளையும் மக்கள் கழகம் ஏற்பாடு செய்யும். அவை விஸ்மா கேலாங் செராயின் சமூக ஊடகப் பக்கங்களில் இடம்பெறும்.

குடியிருப்பாளர்களுக்குச் சமூக ஊடகங்களின் வழி பல போட்டிகளும் நடத்தப்படும் என்று கழகம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்