Images
  • sims avenue blocks
    (படம்: Google Maps)

கேலாங் செராய் சந்தை அருகே உள்ள 4 புளோக்குகளின் குடியிருப்பாளர்களுக்குக் கட்டாய COVID-19 பரிசோதனை

கேலாங் செராய் (Geylang Serai) சந்தை அருகே உள்ள 4 வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் குடியிருப்பாளர்களுக்குக் கட்டாய COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புளோக்குகளின் கழிவு நீர் மாதிரிகளில் COVID-19 கிருமி மாதிரிகள் கண்டறியப்பட்டதாகச் சுகாதார அமைச்சு கூறியது.

சிம்ஸ் அவென்யூவில் (Sims Avenue) உள்ள 842, 844, 846, 848 ஆகிய புளோக்குகளில் கிருமிப்பரவல் சாத்தியம் குறித்து அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.

சமூக அளவில் உள்ள நோய்த்தொற்றுச் சம்பவங்களை உடனடியாகக் கண்டறிய, கட்டாய COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக அது சொன்னது.

அந்த 4 புளோக்குகளில் உள்ள கடை உரிமையாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை செய்யப்படும்.

ஜூலை 17க்குப் பிறகு, கிருமித்தொற்று இல்லை என உறுதியானவர்கள், பரிசோதனையை செய்துகொள்ள வேண்டிய கட்டாயமில்லை.

இன்றும் நாளையும் (ஜூலை 23), 3 கேலாங் செராயில் காலை 9 மணியிலிருந்து மதியம் 4 மணி வரை பரிசோதனை நடைபெறும்.

இம்மாதம் 6ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை பாதிக்கப்பட்ட புளோக்குகளுக்குச் சென்றுவந்தோர், முன்வந்து பரிசோதித்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். 

Top