Images
  • ghandi (1)
    தென்னாப்பிரிக்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலை. (படம்: AFP/JUAN MABROMATA)

மகாத்மா காந்தி சிலைக்கு மலாவியில் சுமார் 3,000 பேர் எதிர்ப்பு

மலாவியில் மகாத்மா காந்தி சிலை நிறுவப்படவுள்ளதற்கு, சுமார் 3,000 பேர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

மகாத்மா காந்திக்கும் அந்த நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

காந்தியின் பெயரிடப்பட்டுள்ள சாலையில் இரு மாதங்களுக்கு முன் சிலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின.

புதுடில்லியின் உதவியோடு 10 மில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் உள்ளரங்கக் கட்டுமானத்தின் ஒரு பகுதியாக அந்தச் சிலை நிறுவப்படுவதாக மலாவி அரசாங்கம் தெரிவித்தது.

காந்தி சிலை மலாவி மக்கள்மீது திணிக்கப்படுவதாகவும், காந்தி இனப் பாகுபாட்டை ஆதரித்தவர் என்றும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், மகாத்மா காந்தியின் எளிமையான வாழ்க்கை முறை, சமூகத் தீமைகளை எதிர்த்து அவர் நடத்திய போராட்டம் ஆகியவற்றை அங்கீகரிப்பதே சிலை வைக்கப்படுவதன் நோக்கம் என்றுகூறி மலாவி அரசாங்கம் தனது செயலைத் தற்காத்துப் பேசியுள்ளது.

ஆப்பிரிக்காவில் சுதந்திரத்துக்காகப் போராடிய பலரும் காந்தியிடமிருந்து உத்வேகம் பெற்றவர்கள் என, மலாவியின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் மனித உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்கு காந்தி ஒரு முன்மாதிரி என்றார் அவர்.

1964இல் இந்தியாவும் மலாவியும் அரசதந்திர உறவைத் தொடங்கின.

அந்நாட்டிற்கு ஆக அதிக நன்கொடை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று 

Top