Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து இணையம் வழியாகவே நடத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர்

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து இணையம் வழியாகவே நடத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர் 

வாசிப்புநேரம் -
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து இணையம் வழியாகவே நடத்தப்பட வேண்டும் - சுகாதார அமைச்சர்

(கோப்புப் படம்: MCI)

COVID-19 நோய்த்தொற்று தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் தொடர்ந்து இணையம் வழியாகவே நடத்தப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

பெரிய அளவிலான ஒன்றுகூடல்கள், விழாக்கள், தேசிய, சமூக நிகழ்ச்சிகளுக்கு அது பொருந்தும் என்றார் அமைச்சர் கான்.

சமூக அளவில் நோய்ப்பரவல் குறைந்திருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றார் அவர்.

தற்போது பல நாடுகளில் இரண்டாம், மூன்றாம் கட்ட நோய்ப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதனால் சிங்கப்பூர் தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும் என்றார் அமைச்சர் கான்.

திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றுக்கு 50 பேர் வரை கூடலாம் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

சில சமய வழிபாட்டு இடங்களிலும் ஒரு நேரத்தில் திரளக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்