Images
  • S Iswaran Global Innovation Alliance
    (படம்: S Iswaran/ Facebook)

சிங்கப்பூரின் அனைத்துலகப் புத்தாக்க கூட்டணி பெங்களூருக்கு விரிவாக்கம்


சிங்கப்பூர் அதன் Global Innovation Alliance எனும் அனைத்துலகப் புத்தாக்க கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளது.

அதில் 12ஆவது நகராக இந்தியாவின் பெங்களூர் இணைந்துள்ளது.

வளர்ந்துவரும் இந்தியாவின் புத்தாக்கக் கட்டமைப்பில் புதிய சிங்கப்பூர் நிறுவனங்களை இணைப்பது அதன் நோக்கம்.

அதன் மூலம் இருதரப்பு வர்த்தகப் பங்காளித்துவத்தை அதிகரிக்க முடியும்.

தொழில்நுட்ப நடுவமாகத் திகழும் பெங்களூரில் அதிகமான அளவில் புதிய நிறுவனங்கள் செயல்படுவதைச் சிங்கப்பூரின் வர்த்தகத் தொழில் விவகாரங்களைக் கவனிக்கும் அமைச்சர் S ஈஸ்வரன் சுட்டினார்.

இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள அனைத்து புதிய நிறுவனங்களில் கால்வாசி பெங்களூரில் செயல்படுகின்றன.

அதனால், இந்தியாவின் புத்தாக்கக் கட்டமைப்புடன், சிங்கப்பூருக்குக் கூடுதல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும் எனத் திரு. ஈஸ்வர கூறினார்.

Enterprise சிங்கப்பூர், இந்திய நிறுவனங்களுடன் 4 இணக்கக் குறிப்புகளைச் செய்துகொண்டது.

ஷாங்ஹாய், மியுனிக், சென் ஃபிரான்சிஸ்கோ (Shanghai, Munich, San Francisco) உள்ளிட்ட நகரங்கள் சிங்கப்பூரின் அனைத்துலகப் புத்தாக்க கூட்டணியில் உள்ளன.
  

Top