Images
  • uni students
    கோப்புப் படம்: TODAY

5000 உயர்கல்வி மாணவர்களுக்கு வெளிநாட்டு வேலைப்பயிற்சி வழங்கப்படலாம்

சிங்கப்பூர் நிறுவனங்களும், திறனாளர்களும் அனைத்துலக அளவில் வளர்ச்சி அடைவதற்குத் தயார்ப்படுத்தும் திட்டம் ஒன்றை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

அதன்கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் 5000 உயர்கல்வி நிலைய மாணவர்களுக்கும், இளம் பட்டதாரிகளுக்கும் வெளிநாட்டு வேலைப்பயிற்சி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகமயமாதலுக்குத் தயார்ப்படுத்தும் திட்டத்தில் 60 சிங்கப்பூர் நிறுவனங்கள் சேர்ந்துள்ளன.

அவை வெளிநாட்டு வேலைப்பயிற்சிகளை அளிக்கவுள்ளன.

அதன் தொடர்பிலான சம்பளச் செலவுக்கு 70 விழுக்காடு வரை நிதியுதவி அளிக்க Enterprise Singapore அமைப்பு முன்வந்துள்ளது.

இளம் திறனாளர்களின் ஆற்றலை வளர்ப்பதால் நிறுவனங்கள் நன்மை அடையும்.

நிறுவனங்களின் பொருள்களையும் செயல்முறைகளையும் மேம்படுத்தவும், வியாபாரத்தை விரிவுபடுத்தவும் இளம் திறனாளர்கள் கைகொடுப்பர் என்று திரு சான் கூறினார்.

மற்ற நாட்டுச் சந்தைகள் எதிர்நோக்கும் சவால்களைப் புரிந்துகொள்ள அந்தத் திட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது.

சிங்கப்பூருக்குத் திரும்பும் இளம் திறனாளர்கள் இங்குள்ள குறைகளைக் கண்டறிந்து, நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி சிங்கப்பூரை வலுப்படுத்த உதவுவர்.

வேறு கலாசாரத்தைச் சேர்ந்தவர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் திட்டம் வழிவகுக்கும் என்று திரு சான் கூறினார்.  

Top