Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட பேருந்துகள்

சிங்கப்பூரில் முதன்முறையாக மெலிதான சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் முதன்முறையாக மெலிதான சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்பட்ட பேருந்துகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

சேவை எண் 15 -இன் இரண்டு பேருந்துகளில் அத்தகைய தொழில்நுட்பத்தை Go Ahead Singapore எனும் பொதுப் போக்குவரத்து நிறுவனம் சோதிக்கிறது.

சூரியசக்தித் தகடுகளைப் பயன்படுத்துவது மூலம் டீசலுக்கான செலவை மூன்று விழுக்காடு வரை மிச்சப்படுத்த முடியும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.

பேருந்துகளில் பொருத்தப்படும் மெலிதான தகடுகள் 1,000 வாட்ஸ் சூரியசக்தியை உற்பத்தி செய்யும் ஆற்றலைக் கொண்டவை.

பேருந்தைத் தொடங்குவதற்குத் தேவைப்படும் பேட்டரிகளுக்கு மின்னூட்டம் செய்ய அது பயன்படுத்தப்படுகிறது.

2 மில்லிமீட்டருக்கும் குறைவான தடிமத்தைக் கொண்டுள்ள தகடுகள்,10 கிலோகிராமுக்கும் குறைவான எடையைக் கொண்டுள்ளன.

சூரியசக்தியில் இயங்கும் ஒவ்வொரு பேருந்தின் மூலம் ஆண்டுக்குச் சுமார் 3.7 டன் எடைக்கு நிகரான கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்று Go Ahead நிறுவனம் நம்புகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்