Images
  • private homes
    (படம்: AFP/Roslan Rahman)

அடுத்த ஆண்டின் முதல் பாதிக்கான அரசாங்க நில விற்பனை திட்டம் அறிவிப்பு

அடுத்த ஆண்டின் முதல் பாதிக்கான அரசாங்க நில விற்பனை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்களும் 9 ஒதுக்கப்பட்ட பட்டியல்களும் திட்டத்தில் அடங்கும்.

அந்த நிலத்தில், சுமார் 6,475 தனியார் குடியிருப்புப் பகுதிகளும் 86 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவு வர்த்தக இடமும், ஆயிரத்துக்கும் அதிகமான ஹோட்டல்களும் கட்டப்படலாம்.

உறுதிப்படுத்தப்பட்ட ஐந்து பகுதிகளிலும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தனியார் குடியிருப்புகள் கட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சுமார் 45 ஆயிரம் தனியார் வீடுகள் கட்டப்படுகின்றன.
ஏற்கனவே கட்டப்பட்ட சுமார் 28ஆயிரம் தனியார் வீடுகள் இன்னமும் காலியாக இருக்கின்றன.  

Top