Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கிராப் வாடகைக் காரில் பிறந்த குழந்தை

மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் கிராப் வாடகைக் காரில் பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தார் மாது ஒருவர்.

வாசிப்புநேரம் -
கிராப் வாடகைக் காரில் பிறந்த குழந்தை

படம்: Nur Syazwani & Kamalrulnizam

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் கிராப் வாடகைக் காரில் பிள்ளை ஒன்றை ஈன்றெடுத்தார் மாது ஒருவர்.

தேசிய தினத்தைன்று தமக்கு பிரசவம் நடக்கும் என்று மிகவும் நம்பிக்கையாக இருந்தார் கமால் வாணி (Kamal Wani). ஆனால் நடந்ததோ வேறு...

பிற்பகலில் மருத்துவப் பரிசோதனைக்குக் கணவரோடு சென்றபோதே அவருக்கு இடுப்பு வலி தொடங்கியது.

ஆனால் இன்னும் சற்று நேரம் உள்ளது என்று எண்ணி வீட்டில் மருத்துவமனைக்குத் தேவையான பொருள்களை எடுக்கச் சென்றார்.

பிரசவ வலி நெடுநேரம் நீடிக்கும் என்று எண்ணி ஆற அமர புறப்பட்டார் அவர்.

கணவருடன் தாம்சன் மருத்துவ நிலையத்திற்குச் செல்ல கிராப் வாடகைக் கார் ஒன்றை எடுத்தார். கிளம்பும் போதே அவருக்குப் பிரசவ வலி கடுமையாகிவிட்டது, இருந்தாலும் தக்க சமயத்தில் மருத்துவமனையை அடைந்துவிடலாம் என நம்பினார் வாணி.

பாதி வழியில் அவரால் வலியைத் தாங்க முடியவில்லை. கிராப் வண்டியினுள்ளேயே அவரது குழந்தை வெளியே வரத் தொடங்கியது.

அதிர்ச்சியடைந்தாலும் வேறு வழியில்லாத கணவர் பிரசவம் பார்க்க, கிராப் ஓட்டுநர் மருத்துவமனையை நோக்கி விரைந்தார்.

மருத்துவமனைக்குச் செல்லும் முன் பெண் குழந்தையை முழுமையாக ஈன்றெடுத்தார் வாணி. பிறந்த  குழந்தை கணவரின் கையில் எந்தியவாறு இருக்கும் படத்தை Facebookஇல் பதிவு செய்தார் வாணி.

பிரசவத்தின்போது தங்களுக்கு உதவியாக இருந்த கிராப் ஓட்டுநருக்கும் தம் நன்றியைத் தெரிவித்தார் அவர்.

ஆகஸ்ட் 7ஆம் தேதி பிறந்த குழந்தைக்கு Mia Ariella Adhwin’a என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்