Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Grab நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மீட்பு

சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம், 2018ஆம் ஆண்டு Grab நிறுவனத்தின் மீது விதித்த கட்டுப்பாடுகளை மீட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம், 2018ஆம் ஆண்டு Grab நிறுவனத்தின் மீது விதித்த கட்டுப்பாடுகளை மீட்டுக்கொண்டுள்ளது.

Uber நிறுவனத்துடன் இணைந்தது தொடர்பில் அந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

புதிய போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு,செயல்படத் தொடங்கியபிறகு அந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

P-2-P எனப்படும் பயணிகள் போக்குவரத்துத் துறை மசோதா நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது.

800க்கும் அதிகமான வாகனங்களைக் கொண்டிருக்கும் வாடகைக் கார்ச் சேவை நிறுவனங்கள் அனைத்தும் உரிமம் பெற்றிருக்கவேண்டும் என்று அந்தக் கட்டமைப்பு வலியுறுத்துகிறது.

அதன் கீழ், Tada Mobility, Gojek, Grab, ComfortDelgro, Ryde ஆகிய நிறுவனங்கள் உரிமம் பெற்றுள்ளன.

ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்கான கட்டணங்கள் வெளிப்படையாக இருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாகவும் அது கூறியது.

அதனையடுத்து, Grab நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்