Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Grab வாகனங்களில் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும் சேவை அறிமுகம்

Grab வாகனங்களில் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும் சேவை இன்று சிங்கப்பூரில் அறிமுகமானது.

வாசிப்புநேரம் -
Grab வாகனங்களில் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும் சேவை அறிமுகம்

படம்: GRAB

Grab வாகனங்களில் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும் சேவை இன்று சிங்கப்பூரில் அறிமுகமானது.

அந்தச் சேவையின் பெயர் "GrabPet"

Beta சேவை எனும் சிறிய அளவில் GrabPet சேவை தொடங்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும் கட்டணம் 14 வெள்ளியில் இருந்து தொடங்குகிறது.

வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தால் செல்லப் பிராணியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லாவற்றையும், Grab வாகனங்களில் எடுத்துச்செல்லலாம்.

ஆனால், பறவைகளுக்கு மட்டும் அந்த அனுமதி இல்லை.

செல்லப் பிராணிகளை எடுத்துச் செல்லும்போது அவற்றின் உரிமையாளரும் கூடவே பயணம் செய்வது கட்டாயம்.

ஒரு பெரிய பிராணி அல்லது இரண்டு சிறிய பிராணிகளை GRAB வாகனங்களில் எடுத்துச் செல்லலாம்.

பிராணிகள் வாகனத்திற்குள் எப்போதும் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது கயிற்றில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

"GrabPet" சவாரியில் கிடைக்கும் கட்டணத்தில் மூன்று வெள்ளியை, கிராப் நிறுவனம் அடுத்த ஒரு மாதத்துக்கு விலங்கு நல அமைப்புக்கு நன்கொடையாக வழங்கும்.

சிங்கப்பூரில் இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு பிராணிகளை எடுத்துச் செல்ல Uber நிறுவனம் UberPet சேவையை வழங்கியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்