Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிறுத்தி வைக்கப்பட்ட GrabShare சேவைகள் - அக்கறை தெரிவித்துள்ள பயணிகள், ஓட்டுநர்கள்

Grab நிறுவனத்தின் GrabShare சேவைகள் அதிகாலை 1 மணியிலிருந்து 5 மணி வரை நிறுத்தி வைத்திருப்பது குறித்து பயணிகளும் Grab ஓட்டுநர்களும் அக்கறை தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
நிறுத்தி வைக்கப்பட்ட GrabShare சேவைகள் - அக்கறை தெரிவித்துள்ள பயணிகள், ஓட்டுநர்கள்

(படம்: Roslan Rahman/AFP)

Grab நிறுவனத்தின் GrabShare சேவைகள் அதிகாலை 1 மணியிலிருந்து 5 மணி வரை நிறுத்தி வைத்திருப்பது குறித்து பயணிகளும் Grab ஓட்டுநர்களும் அக்கறை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு குறித்து பல்வேறு புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்தச் சேவையைக் குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்து வைக்க முடிவெடுத்ததாக Grab நிறுவனம் கூறுகிறது.

GrabShare சேவை வழி, ஒரே திசையை நோக்கிச் செல்லும் பயணிகள், மற்ற பயணிகளுடன், குறைவான கட்டணத்தில் Grab காரைப் பகிர்ந்துகொள்ளலாம்.

அந்தச் சேவையைக் நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்தி வைப்பது பற்றி, ஓட்டுநர்களுக்கு சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பயணிகளுக்கு அது பற்றி தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆகையால், பயணிகள் பலர் அது பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்