Images
  • grab
    (படம்: REUTERS/Edgar Su)

வாடிக்கையாளர் தகவல் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும் - Grab பேச்சாளர் உறுதி


Grab நிறுவனம், விளம்பரத்துக்காக அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம், தனது வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் தகவல்களைப் பாதுகாப்பதில், Grab அதிக கவனம் செலுத்திவருவதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தகவல் தளத்தில் நேர்ந்த பாதுகாப்புக் குறைபாடு காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பெயரும் திறன்பேசி எண்ணும்
மின்னஞ்சல் அனுப்பப்பட்ட அனைவருக்கும் தெரியவந்தன.

மீண்டும் அத்தகைய தவறு நேராவண்ணம், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

வருங்காலத்தில், விளம்பர இயக்கம் மேற்கொள்ளப்படும்போது கைபேசி எண்கள் மறைக்கப்படும் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

2017ஆம் ஆண்டும், 2018ஆம் ஆண்டும், விளம்பரத்துக்காக Grab வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய 120,000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களில் பிற வாடிக்கையாளர்களின் பெயரும், தொடர்பு எண்ணும் இடம்பெற்றிருந்தன.

அதைத் தொடர்ந்து தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்ட விதிகளை மீறியதற்காக Grab நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 

Top