Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Grab நிறுவனத்தில் Toyota 1 பில்லியன் டாலர் முதலீடு

டொயோட்டாவுடன் இணைவதன் மூலம் ஓட்டுநர்களுக்குப் பல்வேறு அனுகூலங்களை வழங்க முடியும் என்று அது நம்புகிறது. 

வாசிப்புநேரம் -


ஜப்பானியக் கார் நிறுவனமான டொயோட்டா (Toyota) தென்கிழக்காசிய தனியார் வாடகை வாகன நிறுவனமான Grabஇல் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

உலகளாவிய தனியார் வாடகை வாகனத் துறையில் ஒரு வாகன உற்பத்தி நிறுவனம் செய்துள்ள ஆகப் பெரிய முதலீடு இது.

GrabFood, GrabPay போன்ற சேவைகளைத் தென்கிழக்காசிய வட்டாரத்தில் விரிவுபடுத்த இந்த முதலீடு உதவும் என்று Grab நிறுவனம் கூறியுள்ளது.

டொயோட்டாவுடன் இணைவதன் மூலம் ஓட்டுநர்களுக்குப் பல்வேறு அனுகூலங்களை வழங்க முடியும் என்று அது நம்புகிறது.

பாதுகாப்பான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு குறைவான சந்தாவைக் கொண்ட வாகனக் காப்புறுதித் திட்டத்தை வழங்குவதும் அதில் அடங்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்