Images
  • grabcare (1)
    (படம்: Grab)

சுகாதார ஊழியர்களுக்காக 24 மணிநேரப் பயணச் சேவை வழங்கவிருக்கும் கிராப்

கிராப் நிறுவனம் சுகாதார ஊழியர்களுக்காக 24 மணிநேரப் பயணச் சேவையை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

நாளையிலிருந்து GrabCare எனும் அந்தச் சேவை செயல்படத் தொடங்கும்.

தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்திலும், டான் டோக் செங் மருத்துவமனையிலும் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் அந்தச் சேவையால் பயன்பெறுவர்.

சுகாதார ஊழியர்கள் கிராப் செயலியில் உள்ள GrabCare சேவையைத் தேர்ந்தெடுந்து வீடுகளுக்குப் பயணம் செய்யலாம்.

அந்தச் சேவையை மேலும் அதிகமான மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்தத் திட்டங்கள் உள்ளதாக Grab நிறுவனம் கூறியது.

சுகாதார ஊழியர்களின் சுமையைக் குறைப்பதற்காக GrabCare சேவை நடப்புக்கு வருவதாகக் கூறப்பட்டது.

புதிய ஏற்பாடு COVID-19 எனப்படும் கொரோனா கிருமிப்பரவலால் பயணங்களை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளும் சுகாதார ஊழியர்களுக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுகிறது.

Top