Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய Grab உணவு விநியோகிப்பாளர்- இணையத்தில் குவியும் பாராட்டு

பூன் லே வட்டாரத்தில் சாலைச் சந்திப்பு ஒன்றில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) லாரி ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

வாசிப்புநேரம் -
விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய Grab உணவு விநியோகிப்பாளர்- இணையத்தில் குவியும் பாராட்டு

படம்: Facebook

பூன் லே வட்டாரத்தில் சாலைச் சந்திப்பு ஒன்றில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) லாரி ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

லாரிக்குள் மாட்டிக்கொண்ட ஓட்டுநரை Grab உணவு விநியோகிப்பாளர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டுக் காப்பாற்றினார்.

ஆடவர் உதவி செய்யும் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவிவருகிறது, இணையவாசிகள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

ஓட்டுநருக்கு உதவிய ஆடவர் 28 வயது முகமது ரியாவ் அல்ஃபியன் (Muhammad Riau Alfian).

விபத்து காலை 10 மணியளவில் நேர்ந்ததது. அவ்வழியாகத் தனிநபர் நடமாட்டச் சாதனத்தில் உணவு விநியோகம் செய்யச்சென்ற அல்ஃபியன் தமது உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு லாரி ஓட்டுநரைக் காப்பாற்ற விரைந்தார்.

அந்தச் செயலைப் படம்பிடித்தவர் சம்பவ இடத்தில் இருந்த முகமது நூர்ஃபட்லி (Mohamad Nurfadly).

தனிநபர் நடமாட்டச் சாதனத்தைப் பயன்படுத்தும் எல்லோருமே அலட்சியமாக நடந்துகொள்வதில்லை, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்களும் இருக்கின்றனர் என்று நூர்ஃபட்லி சொன்னார்.

விபத்தில் சிக்கிய ஒருவர் இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்