Images
  • grab delivery
    (படம்: AFP)

உணவு விநியோக ஓட்டுநர்கள் தொடந்து வருமானம் பெற Grab நிறுவனத்தின் முயற்சிகள்

நடைபாதைகளில் மின் ஸ்கூட்டர்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவு விநியோகச் சேவையின் ஓட்டுநர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Grab ஓட்டுநர்கள் தொடந்து வருமானம் பெற, அந்நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

அவை பற்றி சிங்கப்பூர் GrabFood பிரிவின் தலைமை நிர்வாகி, டிலிப் ரோஸ்ஸனலியிடமிருந்து (Dilip Roussenaly) கேட்டறிந்தது, 'செய்தி'.

- மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்றவற்றைக் குறைந்த விலையில் வழங்க 5 விற்பனையாளர்களோடு ஒப்பந்தம்

குறிப்பிட்ட சில ஓட்டுநர்களுக்கு:

- சைக்கிள்களை வாங்க 300 வெள்ளி வரை சலுகைகள்.
- மின் சைக்கிள்களை வாங்க 500 வெள்ளி வரை சலுகைகள்.
- நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கும் மானியத்தின் கீழ், மின் ஸ்கூட்டர்களை கடைகளில் திருப்பிக்கொடுக்கும்போது, சலுகைகள் இரு மடங்காகலாம். அதன் மூலம் அதிகபட்சம் ஆயிரம் வெள்ளி வரை சலுகை கிடைக்கும்.

- மோட்டார் சைக்கிள் வாடகைச் சேவை நிறுவனங்களோடு Grab இணைந்து செயல்படும்.

அண்மையில், உணவு விநியோகச் சேவை மெதுவடைந்ததற்கு Grab நிறுவனம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டது. 

Top