Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய Grab உணவு விநியோகிப்பாளருக்கு விருது

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்த லாரியில் சிக்கியிருந்தவரை மீட்க உதவிய கிராப் உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்கு விருது வழங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்றிய Grab உணவு விநியோகிப்பாளருக்கு விருது

படம்: Facebook

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து கிடந்த லாரியில் சிக்கியிருந்தவரை மீட்க உதவிய கிராப் உணவு விநியோகிப்பாளர் ஒருவருக்கு விருது வழங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமையன்று அந்த விபத்து நேர்ந்தது.

துணிச்சலுக்காகவும், விரைந்து செயல்பட்டதற்காகவும் முகமது ரியாவ் அல்ஃபியன் (Muhammad Riau Alfian) பாராட்டப்பட்டார்.

28 வயது திரு. அல்ஃபியானின் துணிச்சலைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

முதலில் அவர் ஒரு துணியைக் கையில் சுற்றி லாரியின் சன்னலை உடைக்க முயற்சி செய்கிறார்.

அது முடியாதபோது, அவர் ஒரு கடப்பாரையைக் கொண்டு சன்னலை உடைத்து உள்ளே சிக்கியிருந்த ஓட்டுநரைக் காப்பற்றினார்.

அவசர நிலையில் உதவ முன்வரும் அனைவரும் வீரர்தான் என்று திரு. அல்ஃபியான் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்