Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அகற்றப்பட்ட GrabShare சேவை - ஒழுங்கற்ற பயணிகளே காரணம்

GrabShare சேவை தினமும் அதிகாலை 1 மணியிலிருந்து 5 மணி வரை நிறுத்தப்பட்டதற்கு, ஒழுங்கீனமான பயணிகளே காரணம் என்று Grab நிறுவனம் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
அகற்றப்பட்ட GrabShare சேவை - ஒழுங்கற்ற பயணிகளே காரணம்

படம்: REUTERS/Edgar Su

GrabShare சேவை தினமும் அதிகாலை 1 மணியிலிருந்து 5 மணி வரை நிறுத்தப்பட்டதற்கு, ஒழுங்கீனமான பயணிகளே காரணம் என்று Grab நிறுவனம் சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்துள்ளது.

ஒழுங்கீனமான பயணிகளால் கசப்பான சம்பவங்கள் நேர்ந்துள்ளதாக அந்தத் தனியார் வாடகைக் கார் நிறுவனம் குறிப்பிட்டது.

அதன் தொடர்பில் ஓட்டுநர்கள், பயணிகள் இருதரப்பினரிடமிருந்தும் பல்வேறு புகார்களைப் பெற்றதைத் தொடர்ந்து, அந்தச் சேவையைக் குறிப்பிட்ட நேரத்தில் அகற்ற முடிவெடுத்ததாக Grab நிறுவனம் தெரிவித்தது.

விரும்பத்தகாத பெரும்பாலான சம்பவங்கள் அதிகாலை 1 மணியிலிருந்து 5 மணி வரை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.  

ஓட்டுநருக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தருவதே அதன் நோக்கம் என்று Grab தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்