Images
  • Grace Fu Maritime (1)
    (படம்: National Arts Council)

சிங்கப்பூர் அரசுரிமை பாதிக்கப்பட்டால் அமைதியான முறையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் : அமைச்சர் ஃபூ

சிங்கப்பூர் தனது அரசுரிமை பாதிக்கப்பட்டால், உறுதியான நடவடிக்கை எடுக்கும் அதேவேளை அமைதியாகவும் செயல்பட வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) கூறியுள்ளார்.

சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவு சரியான பாதைக்குத் திரும்பும் என்று நம்புவதாகச் சொன்ன அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவைச் சுட்டினார்.

பதற்றம் அதிகரிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்;
ஆனால், அரசுரிமை பாதிக்கப்பட்டால் அதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது சிங்கப்பூரின் பொறுப்பு என்றார் திருவாட்டி. ஃபூ.

சிங்கப்பூரையும், மலேசியாவையும் பல்வேறு அம்சங்கள் இணைக்கின்றன.

அந்த நல்லுறவை முன்னெடுத்துச் செல்வது பற்றிய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.

அமைச்சர் ஃபூ காவல்துறையின் சாலைக்காட்சியில் கலந்துகொண்டார்.

பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்களும், சாதனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

காவல்துறையின் பணிகள் குறித்து விழிப்புணர்வூட்டி, மக்களுடன் நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கில் சாலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

Top