Images
  • DPM Teo Chee Hean

சிங்கப்பூரில் நிலவும் ஒற்றுமைக்கு நாம் நன்றியுடன் இருக்கவேண்டும்: மூத்த அமைச்சர் தியோ

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கட்டிக்காக்க அனைவரும் கூட்டாகப் பணியாற்றுவதற்கான தேவையை மூத்த அமைச்சர் தியோ சீ ஹியென் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த வட்டாரத்திலும் மற்ற பல நாடுகளிலும் சர்ச்சைகள், கொந்தளிப்பு, சமூகப் பிரச்சினைகள் நிலவுவதைப் பார்க்கிறோம்.

ஆகையால் சிங்கப்பூரில் நிலவும் ஒற்றுமைக்கு நாம் நன்றியுடன் இருக்கவேண்டும் என்றார் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தியோ.

Grace Lodge தாதிமை இல்லத்தில் நடைபெற்ற தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் அவ்வாறு கூறினார்.

சிங்கப்பூர் பௌத்த சேவைகள் அமைப்பு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அந்தத் தாதிமை இல்லத்தின் சுமார் 60 மூத்தோர் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

வெவ்வேறு தலைமுறைகளுக்கு இடையிலும், இனங்களுக்கு இடையிலும் பிணைப்பை வலுப்படுத்துவது நிகழ்ச்சியின் நோக்கம்.

Top