Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழுத்தொகுதிகள் - தெரிந்ததும் தெரியாததும் (பகுதி 2)

குழுத்தொகுதிகள் - தெரிந்ததும் தெரியாததும் (பகுதி 2)

வாசிப்புநேரம் -
குழுத்தொகுதிகள் - தெரிந்ததும் தெரியாததும் (பகுதி 2)

(படம்: Google Maps)

1. அல்ஜூனிட் குழுத்தொகுதி

  •  2011ஆம் ஆண்டிலிருந்து பாட்டாளிக் கட்சி, மக்கள் செயல் கட்சி இடையே கடும் போட்டி நிலவும் தொகுதி.
  • 1997ஆம் ஆண்டு 5 உறுப்பினர்களைக் கொண்ட குழுத்தொகுதியானது. 
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

பாட்டாளிக் கட்சி - சென் ஷோ மாவ் , சில்வியா லிம், லாவ் தியா கியாங், பிரித்தம் சிங், முகமது ஃபைசல் அப்துல் மனாப்

மக்கள் செயல் கட்சி - சுவா எங் லியோங், முரளி பிள்ளை, விக்டர் லாய், ஷம்சுல் கமார், இயோ குவாட் குவாங்

வெற்றி வாக்குகள்: 50.96% (பாட்டாளிக் கட்சி)


2. அங் மோ கியோ குழுத்தொகுதி

  • 1976ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தொகுதி.
  •  2015ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழுத்தொகுதியாக இருந்து, தற்போது 5 உறுப்பினர் கொண்ட குழுத்தொகுதியாகியுள்ளது.
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - லீ சியென் லூங், கோ போ கூன், இன்தான் அஸுரா மொக்தார், கான் தியாம் போ, டெரல் டேவிட், ஆங் ஹின் கீ

சீர்த்திருத்தக் கட்சி - கோ கியாவ் வா , ஜெஸ்சி லூ, ரோய் நங், ஒஸ்மான் சுலைமான், M. ரவி, சிவ சந்திரன்

வெற்றி வாக்குகள்: 78.64% (மக்கள் செயல் கட்சி)


3. ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி

  • 2015இல் பிரித்தெடுக்கப்பட்ட ஃபெங்ஷான் தனித்தொகுதி, இம்முறை குழுத்தொகுதியில் உள்ளடக்கப்படும் .
  • 1997, 2001ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல்களின்போது இங்கு போட்டியில்லை. 2006ஆம் ஆண்டு, பாட்டாளிக் கட்சியினரின் சவாலைச் சந்தித்தது, மக்கள் செயல் கட்சி.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - லீ யீ ஷியான், லிம் சுவீ சே, முகமது மாலிக்கி ஒஸ்மான், ஜெசிக்கா டான்

பாட்டாளிக் கட்சி -ஜெரல்ட் கியாம், டேனியல் கோ, முகமது ஃபைரோஸ் ஷரிஃப், லியோன் பெரேரா

வெற்றி வாக்குகள்: 60.73% (மக்கள் செயல் கட்சி)

4. ஜூரோங் குழுத்தொகுதி

  • 2001இல் உருவாக்கப்பட்ட குழுத்தொகுதி
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - ஆங் வெய் நெங், டெஸ்மண்ட் லீ , ரஹாயு மஹ்ஸாம், டான் வு மெங், தர்மன் சண்முகரத்னம்

சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சி - டேவிட் ஃபூ, சுக்தேவ் சிங், டான் பெங் ஆன், வோங் சீ வாய், வோங் சூன் ஹோங்.

வெற்றி வாக்குகள்: 79.29% (மக்கள் செயல் கட்சி)

5. மரீன் பரேட் குழுத்தொகுதி

  • 1976ஆம் ஆண்டு தனித்தொகுதியாக அமைக்கப்பட்ட மரீன் பரேட் குழுத்தொகுதியில் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் தோங் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
  • 2006ஆம் ஆண்டு மரீன் பரேடின் ஒரு பகுதியாக இருந்த சிராங்கூன் கார்டன்ஸ், 2011ஆம் ஆண்டு அல்ஜுனிட் குழுத்தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - ஃபாத்திமா லத்தீஃப் , கோ சோக் தோங் , சியா கியான் பெங், டான் சுவான் ஜின், எட்வின் தோங்

பாட்டாளிக் கட்சி - ஃபிருஸ் கான், ஹெ டிங்ரூ, இங் ஃபூ எங், டெரன்ஸ் டான், யீ ஜென் ஜோங்

வெற்றி வாக்குகள்: 64.07% (மக்கள் செயல் கட்சி)

6. நீ சூன் குழுத்தொகுதி

  • குழுத்தொகுதியிலிருந்து புதிய கெபுன் பாரு தனித்தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - கா. சண்முகம் , ஹென்ரி குவெக் , லீ பீ வா, முகமது ஃபைஷல் இப்ராஹிம், லூயிஸ் இங்

பாட்டாளிக் கட்சி - ஃபூ செக் குவான், குர்மிட் சிங், கோ தியோங் யீ, ஷரில் லோ, ரோன் டான்

வெற்றி வாக்குகள்: 66.83% (மக்கள் செயல் கட்சி) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்