Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குழுத்தொகுதிகள் - தெரிந்ததும் தெரியாததும் (பகுதி 3)

1. பாசிர் ரிஸ்–பொங்கோல் குழுத்தொகுதி

வாசிப்புநேரம் -
குழுத்தொகுதிகள் - தெரிந்ததும் தெரியாததும் (பகுதி 3)

(கோப்புப்படம்: Google Maps)

1. பாசிர் ரிஸ்–பொங்கோல் குழுத்தொகுதி

  •  வாக்காளர் எண்ணிக்கையில் இரண்டாவது ஆகப் பெரிய குழுத்தொகுதி
  • 1997ஆம் ஆண்டு 4 உறுப்பினர் கொண்ட தொகுதியாக அறிமுகம் கண்ட அது, 2001ஆம் ஆண்டு பாசிர் ரிஸ்-பொங்கோல் என்று பெயர் மாற்றம் கண்டது.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - ஜனில் புதுச்சேரி, இங் சீ மெங் , சுன் ஷுவெலிங், தியோ சீ ஹியென், தியோ செர் லக், ஸைனல் சப்பாரி

சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணி - டெஸ்மண்ட் லிம், ஹர்மிந்தர் பால் சிங், ஆர்தேரோ லிம், ஓங் தெக் செங், வோங் வே வெங்

வெற்றி வாக்குகள்: 72.89% (மக்கள் செயல் கட்சி)


2. செம்பவாங் குழுத்தொகுதி

  • 2011ஆம் ஆண்டு, இந்தக் குழுத்தொகுதியில் இருந்த சில வட்டாரங்கள் பிரிக்கப்பட்டு, மார்சிலிங்–இயூ டீ குழுத்தொகுதி அமைக்கப்பட்டது.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - அம்ரின் அமின், காவ் பூன் வான், லிம் வீ கியாக், ஓங் யீ காங், விக்ரம் நாயர்

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி- அப்துல் ரஷீத், லிம் தோங் ஸென், இங் சுன் ஹோன், யாட்ஸேத் ஹைரிஸ், இயோ ரென்-யுவான்

வெற்றி வாக்குகள்: 72.28% (மக்கள் செயல் கட்சி)


3. தெம்பனிஸ் குழுத்தொகுதி

  • ஆகப் பழைய தொகுதிகளில் ஒன்றான தெம்பனிஸ், 1959இலிருந்து தனித்தொகுதியாக இருந்து 1988இல் குழுத்தொகுதியானது.
  • முன்னாள் சங்காட், யூனோஸ் குழுத்தொகுதி , பாசிர் ரிஸ் குழுத்தொகுதி ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது தெம்பனிஸ் குழுத்தொகுதி.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - பே யாம் கெங், செங் லி ஹுய், டெஸ்மண்ட் சூ, ஹெங் சுவீ கியெட், மசகோஸ் ஸுல்கிஃப்லி

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி- சூங் ஹொன் ஹெங், ஃபொங் சின் லியோங், லிம் தியேன், நூர் லேல்லா மார்டீயா முகமது, செபாஸ்டியன் தியோ

வெற்றி வாக்குகள்: 72.07% (மக்கள் செயல் கட்சி)


4. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி

  • சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவின் தொகுதி.
  • 1955ஆம் ஆண்டு 32 வயதில், திரு. லீ இந்தத் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்றார்.
  • 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியின்றி முடிவு அறிவிக்கப்பட்ட ஒரே தொகுதி.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - சான் சுன் சிங், சியா ஷி லு, இந்திராணி ராஜா, ஜோன் பெரேரா, மெல்வின் யோங்

சிங்கப்பூரர்களுக்கு முன்னுரிமைக் கட்சி- ஆங் யோங் குவான், சிராக் பிரஃபுல் தேசாய், மெல்வின் சியூ, முகமது ஃபாமி அஹ்மது ரைஸ், டான் ஜீ சே

வெற்றி வாக்குகள்: 77.71% (மக்கள் செயல் கட்சி)


5. வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி

  • சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் டாக்டர் டான் செங் போக், மக்கள் செயல் கட்சியின் உறுப்பினராக இருந்தபோது 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர் ராஜா தொகுதி, வெஸ்ட் கோஸ்டின் ஒரு பகுதியாக உள்ளது.
  • குழுத்தொகுதியில் வாக்காளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2015ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலின்போது 99,300ஆக இருந்த அது, தற்போது சுமார் 144,500க்கு அதிகரித்துள்ளது.
  • 5 உறுப்பினர் குழுத்தொகுதி
  • 2015 பொதுத்தேர்தலில் இருமுனைப் போட்டி

மக்கள் செயல் கட்சி - ஃபூ மீ ஹா, லிம் ஹிங் கியாங், எஸ். ஈஸ்வரன், பேட்ரிக் டே

சீர்த்திருத்தக் கட்சி- கென்னத் ஜெயரத்னம், நூராய்னி யூனோஸ், சோ குவான் சூன், ஸு லாய்செங்

வெற்றி வாக்குகள்: 78.57% (மக்கள் செயல் கட்சி) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்