Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பூமலையையும், சிங்கப்பூர் ஆற்றையும் இணைக்கும் 6 கிலோமீட்டர் பாதை

சிங்கப்பூர்ப் பூமலை, சிங்கப்பூர் ஆறு ஆகிய இரண்டையும் புதிய 6 கிலோமீட்டர் பாதை இணைக்கவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
பூமலையையும், சிங்கப்பூர் ஆற்றையும் இணைக்கும் 6 கிலோமீட்டர் பாதை

(Image: National Parks Board)

சிங்கப்பூர்ப் பூமலை, சிங்கப்பூர் ஆறு ஆகிய இரண்டையும் புதிய 6 கிலோமீட்டர் பாதை இணைக்கவிருக்கிறது.

அது தொடர்பான விவரங்களை நகரச் சீரமைப்பு ஆணையமும் தேசிய பூங்காக் கழகமும் வெளியிட்டுள்ளன.

ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தை மேம்படுத்த சென்ற ஆண்டு பொதுமக்களிடமிருந்து கருத்துத் திரட்டும் நடவடிக்கை இடம்பெற்றது.

அதன் அடிப்படையில் பாதையின் ஒரு பகுதியை ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைக்கத் திட்டமிடப்படுகிறது.
நகரச் சீரமைப்பு ஆணையத்தின் நிலையத்தில் இன்று ஒரு கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் 3 பசுமை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

இஸ்தானா பூங்காவை வட்டாரத்தின் இதரப் பசுமைப் பகுதிகளோடு இணைப்பது, இஸ்தானா பூங்காவுக்கும் ஃபோர்ட் கேனிங் (Fort Canning) பூங்காவுக்கும் இடையில் இணைப்புப் பாதையை அமைப்பது, சிங்கப்பூர் ஆற்றுப் பகுதியில் மேலும் பொது இடங்களை அமைப்பது ஆகியவை அந்த மூன்று திட்டங்கள்.

நகரில் அதிகமாகப் பசுமை இடங்களைக் கொண்டிருப்பது உற்சாகத்தைத் தரும் வகையில் அமைவதாகத் திரு. வோங் கூறினார்.

சிங்கப்பூரை வாழ்வதற்கேற்ற, பசுமைமிக்க தோட்ட நகராகத் தொடர்ந்து விளங்கவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதி இவை என்று அவர் குறிப்பிட்டார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்