Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இயற்கை எரிபொருளுக்கு மாறுவது குறித்து ஆராயும் புதிய ஆய்வு

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் திட்டத்துக்குக் கூடுதல் ஊக்கம் கிடைத்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இயற்கை எரிபொருளுக்கு மாறுவது குறித்து ஆராயும் புதிய ஆய்வு

(கோப்புப் படம்: HDB website)

கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்ற சிங்கப்பூரின் திட்டத்துக்குக் கூடுதல் ஊக்கம் கிடைத்துள்ளது.

இயற்கை எரிபொருள்கள், அவை சார்ந்த தொழில்நுட்பத்துக்கு மாறும் வழிமுறைகள் குறித்து எரிசக்திச் சந்தை ஆணையம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.

இப்போதிருந்து 2050 வரை இயற்கை எரிபொருள்களைப் பெருமளவு சார்ந்திருக்கும் வழிகள் பற்றியும் ஆராயப்படும்.


பசுமை எரிசக்திச் சாதனங்கள் பொதுவாக செலவுமிக்கதாகவே கருதப்படுகின்றன. அந்த நிலை விரைவில் மாறக்கூடும்.

சிக்கனமான, நம்பகமான வழிகளில் பசுமை எரிசக்திக்கு மாறும் வழிகளை சிங்கப்பூர் ஆராய்ந்து வருகிறது.

அருப் (Arup) எனும் பிரிட்டிஷ் நிறுவனம் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

கரியமில வாயுவைக் குறைவாக வெளியேற்றும் பொருத்தமான சாதனம் எது என்பது பற்றி அந்நிறுவனம் நான்கு மாதங்கள் ஆராயவிருக்கிறது.

இயற்கை எரிபொருள்களுக்கு மாறுவதில் உள்ள தடைகள், விதிகளில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவையும் ஆராயப்படும்.

அதன் மூலம் வருங்காலத்தில், தற்போதுள்ளதை விட ஐந்து மடங்கு அதிகமாக சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தத் திட்டமிடப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்