Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய கழக வீடுகளில் கூடுதல் பசுமை

புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை இவ்வாண்டு வாங்கவுள்ள குடியிருப்பாளர்கள் கூடுதல் பசுமைச் சூழலை எதிர்பார்க்கலாம். 

வாசிப்புநேரம் -
புதிய கழக வீடுகளில் கூடுதல் பசுமை

(படம்: HDB)

புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளை இவ்வாண்டு வாங்கவுள்ள குடியிருப்பாளர்கள் கூடுதல் பசுமைச் சூழலை எதிர்பார்க்கலாம்.

2016ஆம் ஆண்டிலிருந்து வடிவமைக்கப்பட்டும் பொது வீடமைப்புத் திட்டங்கள் அனைத்தும் புதிய பசுமை விதிமுறைகளுக்குட்பட்டு அமையவேண்டும்.

குடியிருப்பு வட்டாரத்தின் அளவைவிடக் குறைந்தது 4.5 மடங்கு அளவிலான பசுமை இடத்தை வட்டாரம் பெற்றிருக்க வேண்டும். அந்த விதிமுறைகளை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அதே ஆண்டில் அறிமுகம் செய்தது.

இவ்வாண்டிலிருந்து அத்தகைய வீடுகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படும்.

தெம்பனீஸ் கிரீன்வியூ , பிடோக் நார்த் வுட்ஸ் , West Plains@Bukit Batok, Anchorvale Plains, தெம்பனிஸ் GreenBloom & GreenFlora ஆகிய இடங்களில் அவை முதலில் அறிமுகம் கண்டன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்