Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அம்சங்களுக்கான நடவடிக்கைகளை நடத்தும் பொறுப்பில் பொதுச் சேவைத்துறை

சிங்கப்பூரின் பொதுச் சேவைத்துறை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அம்சங்களுக்கான நடவடிக்கைகளை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பொதுச் சேவைத்துறை நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அம்சங்களுக்கான நடவடிக்கைகளை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் பசுமை இலக்குகளை அடைய சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதி அது.

எரிசக்தியையும் தண்ணீரையும் திறம்படப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் காணப்படும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ (Grace Fu) கூறினார்.

CNA-க்கு அளித்த நேர்காணலில், அவர் அது பற்றிப் பேசினார்.

கட்டடங்கள், சேவைகள், செயல்முறைகள் போன்றவற்றை வடிவமைக்கும் முறைகளிலும், நீடித்து நிலைத்திருக்கக்கூடிய அம்சங்கள் இணைக்கப்படவிருப்பதாக அமைச்சர் கிரேஸ் ஃபூ சொன்னார்.

பொதுச்சேவைத் துறைக்குப் பொருள்களை விநியோகம் செய்யும் நிறுவனங்களின் உற்பத்தி, கொள்முதல் வழிமுறைகளும் ஆராயப்படும் என்றார் அவர்.

உணவுக்கழிவுகள், மின்-கழிவுகள் என அனைத்து வகையான கழிவுகளையும் திரட்டுவதற்கான உள்கட்டமைப்பு அவசியம் என்பதையும் அவர் சுட்டினார்.

கழிவுகளைத் திரட்டும் பணிகளுக்கு நிறுவனங்களை நியமிப்பதற்கு வகைசெய்ய, கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அமைச்சர் ஃபூ கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்