Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தில் 7 பேர் கைது

அஞ்சல்பெட்டிகளிலிருந்து வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தில் 7 பேர் கைது

(படம்: Singapore Police Force)

அஞ்சல்பெட்டிகளிலிருந்து வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

23-க்கும் 54-க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆண்களும், மூன்று பெண்களும் தீவில் பல பகுதிகளில் நடந்த திருட்டுச் சம்பவங்களின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டதாய்க் காவல்துறை தெரிவித்தது.

தோ பாயோ லோரோங் 7இல் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தில் அக்டோபர் 11-ஆம் தேதி, 37 வயதுப் பெண் ஒருவர் கைதானார்.

தெம்பனிஸ் ஸ்டிரீட் 86இல் பற்றுச்சீட்டுகளைத் திருடியதாய் நம்பப்படும் 23-வயதுப் பெண்ணும் 24-வயது ஆடவரும் பிடோக் காவல்துறை அதிகாரிகளால் நேற்றுக் (அக்டோபர் 14) கைது செய்யப்பட்டனர். ஆடவர் அதே இடத்தில் முன்னர் திருடியதாய்க் கூறப்பட்டது.

மார்சிலிங் ரோடு, தெலுக் பிளாங்கா ரைஸ், ஹாலண்ட் குளோஸ் ஆகிய இடங்களிலிருந்து மற்றவர்கள் பிடிபட்டனர்.

சம்பவங்களுக்கு இடையில் தொடர்பு இல்லை என்றும் சொந்த ஆதாயத்திற்காகப் பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டன என்றும் ஆரம்பப் புலனாய்வு காட்டுவதாகக் காவல்துறை கூறியது.

பற்றுச்சீட்டுகளுக்குத் தகுதிபெறுவோர் அவற்றை உடனடியாக அஞ்சல்பெட்டிகளிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டதாய் அறிவோர் காவல்துறையிடம் புகார் செய்து, பற்றுச்சீட்டுகளை ரத்துசெய்யவும் மீண்டும் பெறவும் 1800-2222-888 என்ற எண்ணை அழைக்கவும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்