Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அஞ்சல்பெட்டிகளிலிருந்து மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகள் திருட்டு - இருவர் மீது குற்றச்சாட்டு

தெம்பனிஸ் வட்டாரக் குடியிருப்பு கட்டடத்தின் அஞ்சல் பெட்டிகளிலிருந்து வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அஞ்சல்பெட்டிகளிலிருந்து மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகள் திருட்டு - இருவர் மீது குற்றச்சாட்டு

(கோப்புப் படம்: Jeremy Long)

தெம்பனிஸ் வட்டாரக் குடியிருப்பு கட்டடத்தின் அஞ்சல் பெட்டிகளிலிருந்து வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தின் பேரில் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

24 வயது மீக்காயில் வஹ்யுதீன் அப்துல்லாஹ் (Miqhael Wahyudean Abdullah) என்ற ஆடவரும் இர்வாணி நூர் அமிரா அஸமி (Irwani Nur Amira Azami) என்ற 23 வயதுப் பெண்ணும் பற்றுச்சீட்டுகளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

இம்மாதம் 6,7- ஆம் தேதிகளில், தெம்பனிஸ் ஸ்டிரீட் 86 புளோக் 872A இல் அந்தத் திருட்டு நடந்தது.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று முன்தினம் (அக்டோபர் 14) கைது செய்யப்பட்டனர். அவர்கள் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனையோ அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

அவர்கள் இருவருடன், மேலும் ஐவர் பற்றுச்சீட்டுகளைத் திருடிய சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டுகளுக்கு இடையில் தொடர்பு இல்லாமல் இருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஞ்சல்பெட்டிகளிலிருந்து வரவுசெலவுத் திட்ட மளிகைப் பொருள் பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டதன் தொடர்பில் மற்ற குடியிருப்புப் பேட்டைகளிலும் புகார்கள் அளிக்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

திருட்டுச் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்