Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் H&M

H&M கடைகளில் ஆடைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடிய விரைவில் பைகளுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.

வாசிப்புநேரம் -
பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் H&M

படம்: REUTERS/Carlo Allegri

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

H&M கடைகளில் ஆடைகள் வாங்கும் வாடிக்கையாளர்கள் கூடிய விரைவில் பைகளுக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.

அடுத்த வியாழக்கிழமையிலிருந்து ஒவ்வொரு பிளாஸ்டிக் அல்லது காகிதப் பைக்கு 10 காசு விதிக்கப்படும்.

பைகளின் விற்பனையிலிருந்து வசூலிக்கப்படும் தொகை சிங்கப்பூரின் WWF வனவிலங்குப் பாதுகாப்பு இயக்கத்தின் Plastic ACTion எனும் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்படும்.

திட்டத்தில் பங்கேற்கும் முதல் ஆடை விற்பனை நிறுவனம் H&M.

2025க்குள் தேவையற்ற பிளாஸ்டிக் பொட்டலங்களை அகற்றி மறுபயனீடு செய்யக்கூடிய பொருள்களுக்கு மாற நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புதிய மாற்றத்தைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மறுபயனீடு செய்யக்கூடிய பைகளைக் கடைகளுக்குக் கொண்டுவருவர் என்று நம்புவதாக நிறுவனம் கூறியது.

இதற்குமுன், வாடிக்கையாளர்களின் தேவையற்ற ஆடைகளைத் தம் கிளைகளில் சேகரித்து மறுபயனீடு செய்துவருகிறது H&M.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்