Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம், வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடக்கூடாது : அதிபர் ஹலிமா

ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம், வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடக்கூடாது : அதிபர் ஹலிமா

வாசிப்புநேரம் -

அதிபர் ஹலிமா யாக்கோப், இவ்வாண்டின் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம், வழக்கத்துக்கு மாறாக இருந்தாலும் அதன் உண்மையான அர்த்தத்தை இழந்துவிடக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தமது Facebook பக்கத்தில், அவர் அந்தக் கருத்தை வெளியிட்டார்.

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று, முஸ்லிம்கள் தியாகத்தின் அருமையை மதித்துப் போற்றுவர்.

அதேவேளையில், கிருமிப்பரவல் சூழல் காரணமாகச் சின்னச் சின்னத் தியாகங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் கேட்டுக்கொண்டார்.

எடுத்துக்காட்டாக, கூட்டுத் தொழுகையில் வழக்கத்தை விடக் குறைவான முஸ்லிம்களே பங்கேற்க முடியும் என்பதைத் திருவாட்டி ஹலிமா சுட்டினார்.

அது கொரோனா கிருமி பரவும் ஆபத்தைக் குறைப்பதோடு, பலரையும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்கும்.

தற்போதைய சூழலில், மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நன்றியை வெளிப்படுத்தலாம் என்றும் அதிபர் சொன்னார்.

குர்பான் சடங்கில் இவ்வாண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு, பள்ளிவாசல்கள் குர்பான் இறைச்சி வழங்குவதைத் தொடரமுடிவது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்