Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'குடும்பத்துடன் இன்பமாகச் செலவிடும் ஒவ்வொரு நாளும் பண்டிகை தான்': ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் சிங்கப்பூர் முஸ்லிம்கள்

உலகெங்குமுள்ள  முஸ்லிம்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

வாசிப்புநேரம் -
'குடும்பத்துடன் இன்பமாகச் செலவிடும் ஒவ்வொரு நாளும் பண்டிகை தான்': ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடும் சிங்கப்பூர் முஸ்லிம்கள்

(படம்: யாஸ்மின் குடும்பத்தார்)

உலகெங்குமுள்ள  முஸ்லிம்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.உலகெங்குமுள்ள முஸ்லிம்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

சிங்கப்பூரிலும் கொண்டாட்ட உணர்விற்குக் குறைவில்லை.

ஆனாலும், தற்போதைய கிருமித்தொற்றுச் சூழலால் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது; அது பண்டிகைகளுக்கும் பொருந்தும்.

அந்த வரிசையில், இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் பலருக்குச் சற்று வித்தியாசமாகவே அமைந்துள்ளது...

வழக்கமாகக் காலையில் பெருநாள் தொழுகைக்காக என் குடும்பத்துடன் பள்ளிவாசலுக்குச் செல்வேன். மேலும், சிங்கப்பூரிலேயே குர்பான் கொடுப்போம். ஆனால், கட்டுப்பாடுகளால், இந்த ஆண்டு இரண்டையுமே செய்ய முடியவில்லை. இருப்பினும், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரின் வீட்டுக்குக் குறைவான எண்ணிக்கையில் செல்ல முடியும் என்பதே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

- ஆயிஷா, 23

என் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் ஒரே இடத்தில் கூட முடியாது என்பது வருத்தமாக உள்ளது. இருந்தாலும், இன்று வெள்ளிக்கிழமை என்பதால், பெருநாள் தொழுகை, வெள்ளிக்கிழமைத் தொழுகை என இரு தொழுகைகள் உண்டு. அதனால், என்னைப் பொறுத்த வரை இந்த நாள் இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது

- நபீசா பீவி, 68

5 பேர் மட்டுமே கூட அனுமதி உள்ளதால், முன்புபோல் உறவினர்களின் வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. அதனால், இம்முறை Zoom வழிக் கொண்டாட்டம் தான்

- முகமது ரஃபீக், 55

இந்தியாவிலிருந்து புதிய வகை ஆடைகள் வராததால், பெரும்பாலான கடைகளில் பழைய வகைகள் தான் இருந்தன. அதனால், ஆடைகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது கடினமாக இருந்தது.

நிஜாம் நிசா, 46

ஒவ்வோர் ஆண்டும், பெருநாள் அன்று நானும் என் குடும்பத்தாரும் பிரியாணி செய்து பள்ளிவாசலுடனும், உறவினர்கள், நண்பர்கள் என்று பலருடனும் பகிர்வோம். ஆனால், கட்டுப்பாடுகளால், இந்த ஆண்டு அதைச் செய்ய முடியவில்லை. இருப்பினும், என் குடும்பத்துடன் பெருநாளைக் கொண்டாடுவதே எனக்கு மிகுந்த மனநிறைவு அளிக்கின்றது.

அஸ் ரீன், 25

கடைகள் திறந்திருந்ததால், பெருநாளுக்கு இம்முறை என்னால் புதிய புடவை வாங்க முடிந்தது. வழக்கமாக மதிய உணவிற்கு உறவினர்கள் வீட்டுக்குச் செல்வோம். தற்போது அது முடியாது என்பதால் வீட்டுக்கே உணவை அனுப்பி வைப்பதாகக் கூறிவிட்டார்கள்

யாஸ்மின், 22

நோய்ப்பரவல் காரணமாகக் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டியிருந்தாலும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாகச் செலவிட்டு, தொழுகையில் ஈடுபடும் ஒவ்வொரு நாளும் பண்டிகை தான் என்று 'செய்தி'-இடம் பேசியவர்கள் தெரிவித்தனர்.

நிருபர்: அய்னுன்நிசா

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்