Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவும் திட்டங்களுக்காக நிதியிருப்பைப் பயன்படுத்த கொள்கை அளவில் அதிபர் ஒப்புதல்

COVID-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவும் திட்டங்களுக்காக, சிங்கப்பூரின் நிதியிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா யாக்கோப் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளார். 

வாசிப்புநேரம் -
COVID-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவும் திட்டங்களுக்காக நிதியிருப்பைப் பயன்படுத்த கொள்கை அளவில் அதிபர் ஒப்புதல்

கோப்புப் படம்: CNA

COVID-19 கிருமிப் பரவலைச் சமாளிக்க உதவும் திட்டங்களுக்காக, சிங்கப்பூரின் நிதியிருப்பைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா யாக்கோப் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

நாடு எதிர்பாராத நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளியல் நெருக்கடியின்போது, 4.9 பில்லியன் வெள்ளியை நிதியிருப்பிலிருந்து பயன்படுத்த, ஒப்புதல் வழங்கப்பட்டது.

தற்போது உலகளாவிய பொதுச் சுகாதார நெருக்கடி நிலையையும் கடுமையான பொருளியல் நெருக்கடியையும் சிங்கப்பூர் சந்தித்து வருகிறது.

இத்தகைய சூழலில், மீண்டும் இருப்பிலிருந்து நிதியைப் பயன்படுத்த அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதிபர் ஹலிமாவின் சார்பில், அவரது உரையை நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் இன்று நாடாளுமன்றத்தில் வாசித்தார்.

2009இல் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடியை விடவும் SARS தொற்றுநோயின்போது சந்தித்த பொருளியல் பாதிப்புகளை விடவும் இப்போதுள்ள நிலைமை மேலும் கடுமையானதாக, நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்