Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தின அணிவகுப்பு வெற்றிகரமாக அரங்கேற, இளம் தலைமுறையினரின் கடின உழைப்பும், கடப்பாடும் கைகொடுக்கும்: அதிபர் ஹலிமா

தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவர்களின் உற்சாகம், தமக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
தேசிய தின அணிவகுப்பு வெற்றிகரமாக அரங்கேற, இளம் தலைமுறையினரின் கடின உழைப்பும், கடப்பாடும் கைகொடுக்கும்: அதிபர் ஹலிமா

(படம்: ஷரலா தேவி)

தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்கும் மாணவர்களின் உற்சாகம், தமக்கு நெகிழ்ச்சியை அளிப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியுள்ளார்.

கூட்டுப் பள்ளிகள் இசைக் குழுவிலும் ராணுவ இசைத் திறன் காட்சியிலும் பங்குபெறும் மாணவர்களை இன்று (18 ஜூலை) சந்தித்த போது அவர் அவ்வாறு கூறினார்.

இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு வெற்றிகரமாக அரங்கேற, இளம் தலைமுறையினரின் கடின உழைப்பும், கடப்பாடும் கைகொடுக்கும் என அதிபர் ஹலிமா சொன்னார்.

கூட்டுப் பள்ளிகள் இசைக்குழு, ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொள்ளவிருக்கிறது.

நான்கு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 220 மாணவர்கள் அக்குழுவில் உள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்