Images
  • Halimah Philippines
    (படம்: AFP / TED ALJIBE)

சிங்கப்பூர் நிறுவனங்கள் பிலிப்பீன்ஸில் விரிவாக்கம் காண்பதற்குக் கூடுதல் வாய்ப்புகள்: அதிபர் ஹலிமா

சிங்கப்பூர் நிறுவனங்கள் பிலிப்பீன்ஸில் விரிவாக்கம் காண்பதற்குக் கூடுதல் வாய்ப்புகள் இருப்பதாய் அதிபர் ஹலிமா யாக்கோப் கூறியிருக்கிறார்.

தமது அதிகாரத்துவப் பயணத்தின் மூன்றாம் நாளான இன்று மணிலாவில் அவர் வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்தோரைச் சந்தித்துப் பேசினார்.

பிலிப்பீன்ஸ்-சிங்கப்பூர் வர்த்தக மன்றத்தினருடன் அவர் விருந்தில் கலந்துகொண்டார்.

இருநாடுகளும் உள்கட்டமைப்பு, மனிதவளம், புத்தாக்கம் ஆகியவை தொடர்பில் ஒத்துழைப்பை அதிகரிக்கலாம் என்று திருவாட்டி ஹலிமா கூறினார்.

மணிலாவின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஓர் அலுவலக வளாகத்தின் திறப்பு விழாவையும் அவர் பார்வையிட்டார்.

சிங்கப்பூரின் மரீனா பே-யைப் பின்பற்றி அந்த வளாகம் வேலை-வாழ்க்கை-விளையாட்டு அனைத்தும் ஒரே இடத்தில் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

The Podium வளாகத்தில் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் அதில் சில காட்சிக்கூடங்களை அமைத்துள்ளன.

Top